Paristamil Navigation Paristamil advert login

கியூபா அமைச்சர் இராஜினாமா...

கியூபா அமைச்சர் இராஜினாமா...

19 ஆடி 2025 சனி 14:06 | பார்வைகள் : 228


தீவு நாடான கியூபாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் அங்கு மேலும் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

இந்நிலையில், அங்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.

அதாவது, பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார்.

அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே அவர் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்