Luxembourg : இரண்டு பிரெஞ்சுப் பெண்கள் பலி!!

19 ஆடி 2025 சனி 06:00 | பார்வைகள் : 1205
மூன்று பிரெஞ்சு பெண்கள் பயணித்த மகிழுந்து மீது கனரக வாகனம் ஒன்று மோதியதில், இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இச்சம்பவம் Luxembourg நாட்டில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பிரான்ஸ் - லக்ஸம்பேர்க் - பெல்ஜிய எல்லையில் இவ்விபத்து வியாழக்கிழமை மாலை மாலை 7 மணி அளவில் மூன்று பெண்கள் மகிழுந்து ஒன்றில் பயணித்தனர். A6 நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த நிலையில், அவர்களது மகிழுந்தில் ஏற்பட்ட பழுது ஒன்றை சரிசெய்யும் நோக்கோடு மகிழுந்தை வீதியில் திடீரென நிறுத்தியுள்ளனர்.
பின்னால் வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர்களை மோதித்தள்ளியுள்ளது. இதில் மகிழுந்தில் இருந்த மூவரில் இருவர் கொல்லப்பட்டனர். அவர்கள் 49 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.
மூன்றாவது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை லக்ஸம்பேர் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.