காவல் துறையினரை குறிவைத்து தொடரும் தாக்குதல்கள்!!!

18 ஆடி 2025 வெள்ளி 23:25 | பார்வைகள் : 314
சாம்பினி-சுர்-மார்னில் (Champigny-sur-Marne) லிமேய்-ப்ரெவான்ஸ் (Limeil-Brévannes) நகராட்சி காவல் துறை உயர் அதிகாரியின் இரண்டு தனிப்பட்ட கார்கள் வியாழக்கிழமை இரவு வெவ்வேறு இடங்களில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இது திட்டமிட்ட தாக்குதல் என்பதனை சுட்டிக்காட்டுகின்றன. மேலும் சம்பவ இடம் அதிகாரியின் வீட்டிற்கு அருகில்தான் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக களத்தில் செயல்பட்டனர். வழக்கு தொடர்பாக உள்ளூர் காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் சமீப காலமாக சாம்பினியில் காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. புவா-லாபே (Bois-l’Abbé) பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட சமயத்தில் மார்டியர் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்களும், நகராட்சி காவல் துறையினர் ரோந்து செல்லும் போதும் தாக்குதல் நடந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவை ஒரே குழுவின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது, ஆனால் தற்போதைக்கு சம்பவங்களுக்கிடையில் நேரடி தொடர்பு இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை.