சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் குற்றச்சாட்டு

18 ஆடி 2025 வெள்ளி 13:01 | பார்வைகள் : 189
வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தங்களின் அரிய புவி தனிமங்களை கொள்ளையிட முயன்றதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அத்துடன் அதன் முக்கியமான கனிமத் துறையை இலக்காகக் கொண்ட ஊடுருவல் மற்றும் உளவு முயற்சிகளைத் தடுப்பதாக உறுதியளித்தது.
வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் அவற்றின் முகவர்களும் சீனாவிலிருந்து அரிய புவி தனிமங்கள் தொடர்பான பொருட்களைத் திருட உள்நாட்டு சட்டத்தை மீறுபவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக சீனா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், சீன உளவு நிறுவனம் எந்த குறிப்பிட்ட நாட்டையும் குறிப்பிடாமல் அதன் WeChat கணக்கில் பதிவு செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளும் அவற்றின் முகவர்களும் சீனாவிலிருந்து அரிய புவி தனிமங்கள் தொடர்பான பொருட்களைத் திருட உள்நாட்டு சட்டத்தை மீறுபவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக சீனா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாடு, போலி லேபிள்கள், போலியான சரக்கு பரிமாற்றம் மற்றும் சரக்குகளை டிரான்ஸ்ஷிப் செய்தல் மூலம் ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தவிர்க்க முயற்சிப்பதைக் கண்டறிந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளைத் தடை செய்த பின்னர், வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் அதிக அளவு ஆண்டிமனி எனும் தனிமம் தாய்லாந்து மற்றும் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக, ஏப்ரல் தொடக்கத்தில் சீனா தனது ஏற்றுமதி கட்டுப்பாடு பட்டியலில் பல அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடர்புடைய காந்தங்களைச் சேர்த்தது.
சீனாவின் இந்த முடிவு மின்சார வாகனங்கள், ரோபோக்கள் மற்றும் பாதுகாப்புக்கான உலகளாவிய விநியோகத் தொடர்புகளை உலுக்கியது, சீனாவிற்கு வெளியே உள்ள சில வாகன உற்பத்தியாளர்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தியை ஓரளவு நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
சீனாவின் அரிய புவி தனிமங்கள் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் முந்தைய மாதத்தை விட 32 சதவீதம் அதிகரித்துள்ளது, இது அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் பலனளிப்பதற்கான சாத்தியமான அறிகுறி என்றே கூறப்படுகிறது.