Paristamil Navigation Paristamil advert login

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா- அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

29வது பிறந்தநாள் காணும் ஸ்ம்ரிதி மந்தனா- அவரது சொத்து மதிப்பு, ஊதிய விவரம்

18 ஆடி 2025 வெள்ளி 13:01 | பார்வைகள் : 536


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக விளங்குபவர் ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana).

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஸ்ம்ரிதி மந்தனா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

WPL தொடரில் RCB அணிக்கு கிண்ணத்தை வென்று கொடுத்த ஸ்ம்ரிதி மந்தனா, ரூ.3 கோடிக்கு அந்த சீசனில் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பிசிசிஐயின் கிரேட் ஏ ஒப்பந்தத்தில் இருக்கும் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்கள் உள்ளிட்ட பிற விடயங்கள் மூலம் ஸ்ம்ரிதி மந்தனா வருமானம் ஈட்டுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.32 கோடி முதல் ரூ.34 கோடி என கூறப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனையை படைத்துள்ள ஸ்ம்ரிதி மந்தனா, 263 சர்வதேச போட்டிகளில் 9,112 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்