Paristamil Navigation Paristamil advert login

நெதன்யாகுவின் கூட்டணியில் இருந்து மற்றுமொரு கட்சி வெளியேற்றம்

நெதன்யாகுவின் கூட்டணியில் இருந்து மற்றுமொரு கட்சி வெளியேற்றம்

18 ஆடி 2025 வெள்ளி 13:01 | பார்வைகள் : 202


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியில் இருந்து மற்றுமொரு கட்சி வெளியேறியது.

இஸ்ரேல் -ஹமாஸ் இடையே காசாவில் 21 மாதமாக தொடரும் போர் நிறுத்த விதிமுறைகள் குறித்த கலந்துரையாடல் நடந்து வருகின்றது.

இதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு மத கல்லூரி மாணவர்களை இராணுவத்தில் சேர்க்கும் சர்ச்சைக்குரிய முயற்சிக்கு கூட்டணியில் உள்ள அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் கட்சி அறிவித்தது.

இதனால் பெரிய இழப்பு ஏதும் இல்லை என்று பார்க்கப்பட்ட நிலையில், ஷாஸ் அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது.

இதனால் நெதன்யாகுவின் அரசு பெரும்பான்மையை இழந்தது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்