Paristamil Navigation Paristamil advert login

வெப்பம், இடி மின்னல், மழை : சீரற்ற காலநிலை!!

வெப்பம், இடி மின்னல், மழை : சீரற்ற காலநிலை!!

18 ஆடி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1792


இன்று ஜூலை 18, வெள்ளிக்கிழமை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கடும் வெப்பம், இடி மின்னல் தாக்குதல்கள், மழை, சில இடங்களில் வெள்ள அபாயமும் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல்!

Calvados, Charente, Charente-Maritime, Corrèze, Creuse, Dordogne, Eure, Eure-et-Loir, Gironde, Ille-et-Vilaine, Landes, Loire-Atlantique, Maine-et-Loire, Manche, Mayenne, Orne, Pyrénées-Atlantiques, Sarthe, Seine-Maritime, Deux-Sèvres, Vendée as well as Vienne  மற்றும் Haute-Vienne ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னல் தாக்குதல் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு, அவற்றுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம்!

மழை வெள்ளம் காரணமாக Manche, Calvados மற்றும் Orne  ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பம்!

வெப்பம் காரணமாக நாட்டின் தெற்கு மாவட்டங்களான  Hérault, Aude மற்றும் Pyrénées-Orientales ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு  30°C  முதல், அதிகபட்சமாக 35°C  வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்