Paristamil Navigation Paristamil advert login

கைப்பைக்குள் கிடந்த ticket « Cash »  €500,000 யூரோக்கள் அதிஷ்ட்டம்!!

கைப்பைக்குள் கிடந்த ticket « Cash »  €500,000 யூரோக்கள் அதிஷ்ட்டம்!!

19 ஆடி 2025 சனி 17:49 | பார்வைகள் : 7475


ஐந்து யூரோக்களுக்கு சுரண்டல் டிக்கெட் ஒன்றை வாங்கிய பெண் ஒருவர், 500,000 யூரோக்கள் வெற்றி பெற்றுள்ளார். 

Mèze (Hérault) நகரைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த பெரும்தொகை பணத்தை பெற்றுள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் Fête de la Musique இசை நிகழ்ச்சி இடம்பெறுக்கொண்டிருக்கும் போது குறித்த பெண் ஒருவர் 'Cash' சுரண்டல் சிட்டை ஒன்றை ஐந்து யூரோக்களுக்கு வாங்கியிருந்தார்.

ஆனால் அவர் அதனை கைப்பைக்குள் வைத்து மறந்துவிட்டார். மூன்று நாட்களின் பின்னரே அவர் அதனை எடுத்து சுரண்டியுள்ளார். அதில் தான் அவருக்கு அதிஷ்ட்டம் கிடைத்துள்ளது. மூன்றுநாட்கள் தாமதமாக அவருக்கு அரை மில்லியன் யூரோக்கள் பணம் கிடைத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்