Yvelines : காவல்துறையினர் மீது கத்திக்குத்து! - பெண் கைது!!
18 ஆடி 2025 வெள்ளி 00:28 | பார்வைகள் : 2761
காவல்துறையினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 17, வியாழக்கிழமை இச்சம்பவம் La Verrière, Yvelines நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள தொடருந்து நிலையம் அருகே பெண் ஒருவர் காவல்துறையினரை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். காவல்துறையினர் அப்பெண் மீது ஸ்பிரே மூலம் நிலைகுலையச் செய்து, கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை பாதசாரிகள் பலர் படம்பிடித்து சமூகவலைத்தளத்தில் பதிவுசெய்து வருகின்றனர்.
அதிஷ்ட்டவசமாக காவல்துறையினர் எவரும் காயமடையவில்லை. தாக்குதலுக்குரிய நோக்கம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. குறித்த பெண்ணுக்கு மனநல பிறழ்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan