காவல்துறையினருக்கு பணம் வழங்கிய Mbappé! - ஐவர் விசாரணையின் கீழ்..!!

18 ஆடி 2025 வெள்ளி 00:28 | பார்வைகள் : 892
பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதற்காக உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé, காவல்துறையினருக்கு பணம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் €180,300 யூரோக்கள் பணம் மொத்தமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் போது பிரெஞ்சு தேசிய அணியை பாதுகாத்ததற்காக ‘நன்கொடையாக’ இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
€30,000 யூரோக்கள் வீதம் நான்கு காவல்துறையினருக்கும், அவர்களின் பிரிகேடியர் அதிகரிக்கு €60,300 யூரோக்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காசோலைகள் Kylian
Mbappé இன் வங்கிக்கணக்கில் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
PSG கழகத்துடனான பிடுங்குப்பாட்டின் போது Kylian Mbappé இன் வங்கிக்கணக்கு சோதனையிடப்பட்டது. அதன்போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அதை அடுத்து, குறித்த ஐந்து காவல்துறையினர் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடமையினரை செய்வதற்காக இலஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.