Évry-Courcouronnes: 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது!
17 ஆடி 2025 வியாழன் 22:41 | பார்வைகள் : 11330
எவ்ரி-கூர்குரோன்ஸ் Évry-Courcouronnes நகர மையத்தின் (la mairie) முன்பாக ஜூலை 16ஆம் திகதி இரவு, 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
ஹெட்ஃபோன் மற்றும் மொபைலை இருவர் தகராறின் போது திருடி, அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் கால் பகுதியில் சூட்டதாக சிறுவன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவ குழுவினர் அவனை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்; அவனது உயிருக்கு ஆபத்து இல்லை.
காவல்துறையினர் சந்தேகநபர்களை தேடுதல் வேட்டை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர், அவரிடம் கண்ணீர் புகை குண்டு இருந்தது ஆனால் துப்பாக்கி இல்லை. அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; இன்னும் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan