பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும் - இஸ்ரேலின் கோரிக்கை

17 ஆடி 2025 வியாழன் 18:04 | பார்வைகள் : 739
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர்களிற்கு எதிரான பிடியாணையை இரத்துச்செய்யவேண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை கைவிடவேண்டும் என்ற இஸ்ரேலின் வேண்டுகோளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மே 9ம் திகதி இஸ்ரேல் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தள்ளது.
பாலஸ்தீன பகுதிகளில் இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை என்ற இஸ்ரேலின் வாதத்தை நிராகரித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்பினை மீண்டும் உறுதி செய்துள்ளது.
பாலஸ்தீனம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிக்க கூடாது என்ற இஸ்ரேலின் வேண்டுகோளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025