ஐந்தாம் வார விடுமுறையை பணமாக்குவதா? தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு!!!

17 ஆடி 2025 வியாழன் 17:00 | பார்வைகள் : 1614
ஐந்தாவது வார ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணமாக மாற்றும் யோசனை தொழிலாளர் அமைச்சர் அஸ்டிரிட் பணோஸ்யான் (Astrid Panosyan) முன்வைத்திருந்தார்.
இது 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பகுதியாகவும், வேலை நேரத்தை அதிகரிக்க ஒரு வழியாகவும் கூறப்பட்டது. ஆனால் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பர்ட் (Eric Lombard) இதனை திட்டமிடப்படாத ஒன்றாகத் தெரிவித்து, இது அரசாங்கத்தினுள் ஒருமித்த யோசனை அல்ல என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
மேலும் அவர் இது "வேலை திட்டம்" என்ற திட்டத்துக்குள் மட்டுமே விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த யோசனை தொழிற்சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளது.
குறிப்பாக CFDT சங்கத்தின் தலைவி மரிலீஸ் லியோன் (Marylise Léon), இது தொழிலாளர் உரிமைகளை மீறுவதாகவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க விடுமுறையை விற்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதாவது, வேலை செய்பவர்கள் தங்கள் விடுமுறையை இழந்து, கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.