பிரெஞ்சுக்காரர்கள் ஜெர்மனியர்ளை விட "100 மணிநேரம்" குறைவாக வேலை செய்கிறார்களா?

17 ஆடி 2025 வியாழன் 14:56 | பார்வைகள் : 1230
பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியரை விட ஆண்டுக்கு 100 மணி நேரம் குறைவாக வேலை செய்கிறார்கள் என்று அமைச்சர் அமெலி டி மொன்சலின் (Amélie de Montchalin) கூறியதன் அடிப்படை தவறானது.
அவர் மேற்கோளாக காட்டிய OCDE ஆய்வு, நாட்டின் மொத்த வேலை நேரத்தை அதன் மக்கள் தொகையால் வகுத்து கணக்கிடுகிறது. இதனால், குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் உள்ளிட்டவர்களும் சேர்க்கப்படுவதால், அது வேலை செய்பவர்களின் உண்மையான உழைப்பை பிரதிபலிக்கவில்லை.
உண்மையான தரவுகளைப் பார்த்தால், வேலை செய்பவர்கள் ஆண்டுக்கு பிரான்ஸில் சுமார் 1,494 மணி நேரம் பணிபுரிகிறார்கள், ஆனால் ஜெர்மனியில் அந்த எண்ணிக்கை 1,340 மணி நேரம் மட்டுமே. அதாவது, வேலை செய்பவர்கள் அளவில், பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியர்களை விட அதிக நேரம் வேலை செய்கிறார்கள். எனவே, அமைச்சரின் கூற்று தவறாக விளங்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தை அடிப்படையாக கொண்டதாகும்.