இலங்கையில் கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

17 ஆடி 2025 வியாழன் 13:59 | பார்வைகள் : 181
கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீட்டராக அதிகரிக்கும் என்றும், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.