ஓய்வை அறிவித்த இருமுறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் ரஸல்

17 ஆடி 2025 வியாழன் 13:59 | பார்வைகள் : 132
மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரரான ஆந்த்ரே ரஸல் (Andre Russell) மேற்கிந்திய தீவுகளின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக, 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியில், ரஸல் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் தனது பங்களிப்பை வெளிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆந்த்ரே ரஸல் அறிவித்துள்ளார்.
அவர் 56 ஒருநாள் போட்டிகளில் 1034 ஓட்டங்கள் மற்றும் 70 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் 84 டி20 போட்டிகளில் 1078 ஓட்டங்கள் மற்றும் 61 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தனது எக்ஸ் பக்கத்தில், "15 ஆண்டுகளாக நீங்கள் மேற்கிந்திய தீவுகளுக்காக இதயத்துடனும், ஆர்வத்துடனும், பெருமையுடனும் விளையாடியுள்ளீர்கள்.
இரண்டுமுறை டி20 உலகக்கோப்பை சாம்பியனாக இருந்து, மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உங்கள் அற்புதமான சக்தியை காட்டியுள்ளீர்கள்" என ரஸலுக்கு பிரியாவிடை அளித்துள்ளது.