இரண்டு பொது விடுமுறை நீக்கம்.. - ஆறு வருடங்களுக்கு முந்தைய மக்ரோனின் காணொளியை பகிரும் இணையவாசிகள்!!

17 ஆடி 2025 வியாழன் 07:15 | பார்வைகள் : 1931
இரண்டு பொது விடுமுறைகளை நீக்குவது தொடர்பில் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ திட்டம் ஒன்றை முன்மொழிந்த நிலையில், ஜனாதிபதி மக்ரோன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் (முதாலவது பதவிக்காலத்தில்) மக்ரோன் தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதே போன்று, பொது விடுமுறைகளை குறைப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, 2019 ஆம் ஆண்டில் மக்ரோன் குறித்த ‘ஐடியா’வை நிராகரித்திருந்தார். "இந்த முறையை நான் ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே இதை முயற்சித்தோம், ஏனென்றால் அது நன்றாக வேலை செய்யவில்லை, ஏனென்றால் அது தெளிவாக இல்லை," என எலிசே மாளிகையில் வைத்து ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து மக்ரோன் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, 2004 ஆம் ஆண்டு Jean-Pierre Raffarin பிரதமராக இருந்தபோது இந்த திட்டத்தை முன்மொழிந்து அது கைவிடப்பட்டது. அதனை மேற்கோள் காட்டியே 'நாங்கள் ஏற்கனவே இதை முயற்சித்தோம்’ என மக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.
இன்று மக்ரோனின் அரசாங்கமே மீண்டும் அதனைக் கையில் எடுத்துள்ளமை பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பொது விடுமுறைகளை நீக்குவதன் மூலம் வருடத்துக்கு 2.4 பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.