Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு! 20 பேர் உயிரிழந்த பரிதாபம்

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு! 20 பேர் உயிரிழந்த பரிதாபம்

17 ஆடி 2025 வியாழன் 09:59 | பார்வைகள் : 242


நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிளெட்டுவா மாகாணத்தில் உள்ள டாகோஸ் என்ற கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கு உறங்கிக் கொண்டிருந்த கிராமத்தினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

நைஜீரியாவின் பல்வேறு மாகாணங்களில் விவசாயிகளுக்கும், கால்நடை பராமரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்