அரச செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்! - பெரும்பான்மையான மக்கள் கருத்து!!

16 ஆடி 2025 புதன் 23:28 | பார்வைகள் : 802
ஜனாதிபதியின் பயணங்கள் உட்பட அரச செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பில் ஈடுபட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் புதிய வரவுசெலவுத்திட்டத்தில் 40 பில்லியன் யூரோக்களை சேமிப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமர் சில நாட்கள் முன்பாக வாசித்திருந்தார். இரண்டு பொது விடுமுறைகளை இரத்துச் செய்வது, கொடுப்பனவுகளின் அதிகரிப்பை தடுப்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
இந்நிலையில், பிரெஞ்சு மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், 'அரச செலவீனங்களை குறைக்க வேண்டுமா?' என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 90% சதவீதமானவர்கள் 'ஆம்' எனவும், 10% சதவீதமானவர்கள் 'இல்லை' எனவும் தெரிவித்தனர்.
CSA நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது.
ஜனாதிபதியின் அரச பயணத்துக்கான செலவு 2022 ஆம் ஆண்டில் 13.3 மில்லியனாகவும், 2023 ஆம் ஆண்டில் அது 21 மில்லியனாகவும் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.