Garges-lès-Gonesse : எரியூட்டப்பட்ட பேருந்து.. காவல்துறையினர் மீதும் தாக்குதல் - பலர் கைது!!

16 ஆடி 2025 புதன் 18:01 | பார்வைகள் : 4128
பரிஸ் புறநகரான Garges-lès-Gonesse (Val-d'Oise) இல் காவல்துறையினருக்கும் - சில இளைஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பேருந்து ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமைக்கும் - புதன்கிழமைக்கும் இடைப்பட்ட நள்ளிரவில் இத்தக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 1.30 மணி அளவில் அங்குள்ள நகரப்பகுதி ஒன்றில் வைத்து இளைஞர்கள் சிலர் காவல்துறையினரை தாக்கியுள்ளனர். அத்தோடு பொதுச் சொத்துக்களையும் சேதமாக்கியுள்ளனர்.
இரவுநேர பேருந்து ஒன்றை வழிமறித்து அதனை எரியூட்டியுள்ளனர். அதை அடுத்து அவர்களை கலைந்துபோகச் செய்யும் நோக்கில் LBD எனப்படும் இறப்பர் குண்டுகளிலான துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான குப்பைத்தொட்டிகள் எரியூட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அருகருகே உள்ள இரு நகரங்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றே காவல்துறையினரை நோக்கி திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025