உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்படும் முகமட் அம்ரா..!!

16 ஆடி 2025 புதன் 15:25 | பார்வைகள் : 481
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகளில் சிறைவைக்கப்பட்டுள்ள முகமட் அம்ரா, விரைவில் பிரான்சில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றுப்பட உள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மன்னனான அம்ரா, தற்போது Condé-sur-Sarthe சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பா-து-கலேயில் நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin புதிய சிறைச்சாலை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஏனைய கைதிகளிடம் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை தனிமைப்படுத்தும் நோக்கில், வெளித்தொடர்பு இல்லாமல் Vendin-le-Vieil (Pas-de-Calais) சிறைச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. அச்சிறைச்சாலைக்கே அம்ரா மாற்றப்பட உள்ளார்.
முகமட் அம்ரா சிறைச்சாலையில் இருந்து தப்பித்த நிலையில் கடந்த பெப்ரவரியில் ருமேனிய தலைநகர் Bucharest நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.