78 வயது மூதாட்டி மீது ஆறு முறை கத்தி குத்து!!!

16 ஆடி 2025 புதன் 13:58 | பார்வைகள் : 537
Yvelines மாவட்டம் Limay பகுதியில் 78 வயதான ஓய்வுபெற்ற ஒரு பெண் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ குழுவினர் அவசரமாக சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது கழுத்தில், கையில் மற்றும் நான்கு முறை முதுகில் காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயங்கள் மோசமானதாக இல்லாததால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தற்போது தெரியவில்லை. காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது, மேலும் குடும்ப தகராறு உள்ளிட்ட பல கோணங்கள் விசாரணை நடத்தப்படுகின்றது. இந்த வயதான பெண்மணியின் வாக்குமூலம் மூலம் சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.