Paristamil Navigation Paristamil advert login

தொதல் அல்வா..

தொதல் அல்வா..

16 ஆடி 2025 புதன் 13:14 | பார்வைகள் : 341


தொதல் என்பது அல்வா போன்ற இனிப்பு வகை உணவாகும். தேங்காய், பனைவெல்லம், பச்சரிசி வைத்து செய்யப்படும் தொதல் ஒருமாதம் ஆனாலும் கெடாமல் நன்றாக இருக்கும். இந்த கீழக்கரை ஃபேமஸ் தொல் செய்வதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;-பச்சரிசி, தேங்காய், ஜவ்வரிசி, ஏலக்காய், பனைவெல்லம், சர்க்கரை, பாசிப்பருப்பு, கடலைமாவு, உப்பு

செய்முறை;-தேங்காய் நன்றாக துருவி அதன் சாறை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு கடலை மாவை மற்றும் ஜவ்வரிசி போட்டு நன்றாக ஒருசேர கலக்கவும். இதில் கருப்பட்டியை கரைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

இதன்பின் கெட்டியாகி விடும் அப்போது உப்பு, சரக்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ளவும். நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு பாசிப்பருப்பு கொஞ்சம் சேர்த்துக்கொண்டு அடிப்பிடிக்க விடாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

சிறிது நேரத்தில் தேங்காயில் இருந்து எண்ணெய் பிரிந்து முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் கமகமக்கும் சுவையில் கீழ்க்கரை ஸ்பெஷல் தொதல் தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்