டொரொண்டோவில் காற்றின் தரம் குறித்து மீண்டும் எச்சரிக்கை

16 ஆடி 2025 புதன் 09:20 | பார்வைகள் : 1259
கனடா – வடக்கு ஒன்டாரியோ மற்றும் ப்ரேரீஸ் பகுதியிலிருந்து வரும் காட்டுத் தீ புகையால், டொரொண்டோ நகரம் முழுவதும் காற்று மாசு உயர்ந்த நிலையில் உள்ளது.
இதையடுத்து, கனடிய சுற்றாடல் நிறுவனம் சிறப்பு காற்று தர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இத்துடன், நகரில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வெப்ப அலை எச்சரிக்கையும் அமுலில் உள்ளது.
“காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நேரங்களில், மக்கள் வெளியே செல்லும் நேரத்தை குறைக்க வேண்டும். விளையாட்டுகள், திறந்த வெளி செயற்பாடுகள், விழாக்கள் போன்றவை மீண்டும் திட்டமிடப்பட வேண்டும்,” என்று தேசிய காலநிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Swiss நிறுவனமான IQAir வெளியிட்ட தரவின்படி, டொரொண்டோ தற்போது உலகின் 12வது மோசமான காற்று தரமுள்ள நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஒரு கட்டத்தில், டொரொண்டோவில் காற்று தரம் உலகிலேயே இரண்டாவது மோசமான நிலைக்கு (பக்தாத், ஈராக் க்குப் பிறகு) காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.