காட்டுத்தீ பரவும் அபாயம்! - மூன்று மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை!!

16 ஆடி 2025 புதன் 06:33 | பார்வைகள் : 2657
ஜூலை 16, இன்று புதன்கிழமை நாட்டின் தெற்கு மாவட்டங்கள் மூன்றுக்கு காட்டுத்தீ பரவும் அபாயம் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bouches-du-Rhône, Var மற்றும் Vaucluse ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு Aude, Hérault, Gard, Ardèche, Drôme மற்றும் Hautes-Alpes ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.