பாடபொருட்களின் விலை உயர்வை சமாளிக்க பெற்றோரை கூட்டு கொள்முதல் செய்ய FCPE-இன் ஆலோசனை!!!

15 ஆடி 2025 செவ்வாய் 21:43 | பார்வைகள் : 5863
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தொடக்கத்தில் பாடபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர் அமைப்பான FCPE-வின் துணைத் தலைவர் கிரெகுவார் அன்செல் (Grégoire Ensel), பெற்றோர் கூட்டு கொள்முதல் (achats groupés) செய்வதை பரிந்துரைத்துள்ளார்.
இது பொருட்களை மொத்தமாக வாங்குவதன் மூலம் விலையை குறைக்க உதவும் என அவர் கூறுகிறார். UFC-Que Choisir என்ற நுகர்வோர் அமைப்பும், பெற்றோர் விற்பனை கடைகளில் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்த விரைவாகவே வாங்கத் தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், கிரெகுவார் அன்செல் விற்பனையாளர்கள் விலை உயர்வுக்கான காரணங்களை வெளிப்படையாக கூறவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூலப்பொருட்கள் விலை குறைந்துள்ள போதிலும், பாடபொருட்கள் விலை ஏறுவதற்கான பழைய காரணங்கள் (உக்ரைன் போர், எண்ணெய் விலை, பணவீக்கம்) இப்போது பொருந்தாது என அவர் கூறியுள்ளார்.
அவர் பாடசாலைகளுடன் கலந்துரையாடி, தேவையற்ற பொருட்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், FCPE பாடபொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025