Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் நீச்சல்... 10 நாட்களில் 20,000 பேர் பங்கேற்றனர்!!

சென் நதியில் நீச்சல்... 10 நாட்களில் 20,000 பேர் பங்கேற்றனர்!!

15 ஆடி 2025 செவ்வாய் 20:12 | பார்வைகள் : 2409


சென் நதியில் நீந்த முடியும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த 10 நாட்களில் 20,0000 பேர் வரை நதியில் நீந்தியுள்ளனர்.

சென் நதியினை மையமாக கொண்டு மூன்று நீச்சல் தடாகங்கள் கடந்த ஜூலை 5 ஆம் திகதி திறக்கப்பட்டது. இன்றோடு 10 நாட்கள் நிறைவடைகிறது. இந்த பத்து நாட்களில் நான்கு நாட்கள் சீரற்ற காலநிலை, நீரின் மாசடைவு போன்ற காரணங்களினால் மூடப்பட்டிருந்தது. மீதமுள்ள ஆறு நாட்களில் கிட்டத்தட்ட 20,000 பேர் நீந்தியுள்ளனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை வரையான நாட்களில் 12,354 பேர் நீந்தியுள்ளனர். சென் நதியில் நீச்சல் என்பது பரிஸ் மக்களுக்கு 103 ஆண்டுகளின் பின்னர் அனுமதிக்கப்பட்டதாகும்.

இந்த நீச்சல் தடாகங்கள் வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை திறக்கப்படும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்