Paristamil Navigation Paristamil advert login

அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா!!

அதிமுக - பாஜ கூட்டணியை உடைக்க விரும்பும் திருமா!!

15 ஆடி 2025 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 158


அதிமுக - பாஜ கூட்டணி ஏற்பட்டது முதல் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதை உடைக்கும் நோக்கத்தில் தினம் ஒரு கருத்தை உதிர்த்து வருகிறார்.

கேட்கும் தொகுதிகளை கொடுக்காவிட்டாலோ அல்லது கூட்டணி ஆட்சியில் இடம் தராவிட்டாலோ அதிமுக கூட்டணி பக்கம் தாவி விடுவேன்'' என்று திமுகவை மறைமுகமாக மிரட்டிக்கொண்டு இருந்தார் திருமா. அதிமுக கூட்டணியில் திண்ணை காலியாக இருக்கும் வரை திருமாவின் மிரட்டலுக்கு மதிப்பு இருந்தது. ஆனால், திண்ணையில் என்று பாஜ வந்து உட்கார்ந்ததோ அன்றே திருமாவின் ஆசையில் அடி விழுந்தது.

இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. அதிமுக கூட்டணியை உடைத்து, திண்ணையை காலி செய்ய வைத்து தான் போய் அமர்ந்துகொள்ளலாம் என விசிக நினைக்கிறது. அதற்கு ஏற்ப தினமும் ஒரு கருத்தை அதிமுக மீது அக்கறை உள்ளவர் போல காட்டிக்கொண்டு இருக்கிறார் திருமா.

கடந்த சில நாட்களில் அவர் உதிர்த்த கருத்துகள்:

* அதிமுக - பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்குமே தவிர வளராது

* ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணியை அறிவிக்க அதிமுகவுக்கு என்ன அழுத்தம்?

* அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் முழு திட்டம். இதனை அதிமுகவினர் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்?

* முருகன் மாநாட்டில் ஈவெராவையும், அண்ணாதுரையையும் இழிவுபடுத்திய பாஜக உடன் எப்படி அதிமுக பயணிக்க முடியும்; இது தற்கொலைக்கு சமமானது.

* அதிமுக - பாஜ இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை

* பாஜவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ். அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.

* நான் ஆதாயம் கருதினால் அதிமுக - பாஜக இணைந்தே இருக்கட்டும் என வாழ்த்துவேன்.

* அதிமுக-பாஜக கூட்டணி பொருந்தாதது. அமித்ஷா, அதிமுகவை கிள்ளுக்கீரையாக கருதுகிறார்.

ஆனால் என்ன, இவ்வளவு சொன்ன பிறகும் அதிமுக அல்லது பாஜ சைடில் இருந்து பெரிதாக ரியாக்ஷன் எதுவும் வரவில்லை. அது தான் திருமாவுக்கு இன்னமும் ஏமாற்றமாக இருக்கிறது. திமுக கூட்டணியில் தனக்கு ‛‛டிமாண்ட்'' குறைகிறதே என்ற கவலையும் அவரது கருத்துகளில் தொனிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்