Paristamil Navigation Paristamil advert login

RER சேவைகளின் ஒரு பகுதி தடைப்படுகிறது!!

RER சேவைகளின் ஒரு பகுதி தடைப்படுகிறது!!

15 ஆடி 2025 செவ்வாய் 12:24 | பார்வைகள் : 1145


பல்வேறு RER  சேவைகள் திருத்தப்பணிகள் காரணமாக தடைப்பட உள்ளன. சில சேவைகள் முற்றாகவும், சில சேவைகள் பகுதி நேரமாகவும் தடைப்பட உள்ளன.

RER A

சேவைகள்  Le Vésinet முதல் Le Pecq  வரையும், Saint Germain-en-Laye வரையும் வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும்,

Rueil-Malmaison  முதல் Saint-Germain-en-Laye வரை ஓகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும் தடைப்பட உள்ளன.

மாற்றீடாக பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

RER B

சேவைகள்  La Plaine முதல் Le Bourget  வரை இன்று ஜூலை 15 முதல் வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதிவரையான ஐந்து வாரங்கள் தடைப்பட உள்ளன.

La Croix de Berny தொடக்கம் Massy-Palaiseau வரையான சேவைகள் மட்டும் இரவு 10.45 மணியின் பின்னர் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RER D

ஜூலை 12 -14 ஆகிய மூன்று நாட்கள் தடைப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஓகஸ்ட் 15 தொடக்கம் 17 ஆம் திகதிவரையான மூன்று நாட்கள் தடைப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்