கனடாவில் சைக்கிள் போட்டி நிகழ்வின் போது விபத்து

15 ஆடி 2025 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 209
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பென்டிக்டன் பகுதியில் நடைபெற்ற Okanagan Granfondo சைக்கிள் போட்டி நிகழ்வின் போது, காரொன்றுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு சைக்கிள் ஓட்டுபவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இரண்டு சைக்கிளோட்டிகள் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வைற் லேக் வீதிப் White Lake Road பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக வைற் லேக் வீதி White Lake Road தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓகன்கான் கிரான்போன்டோ Okanagan Granfondo என்பது வட அமெரிக்காவின் முக்கிய சைக்கிள் போட்டிகளில் ஒன்றாகும்.
இது பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan மது உற்பத்தி மாவட்டம் வழியாக நான்கு மாறுபட்ட பாதைகளில் நடைபெறும். போட்டி Penticton நகரில் துவங்கி, அதிலேயே முடிவடைகிறது.
இந்த நிகழ்வில் சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதும், விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.