கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது
15 ஆடி 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 2631
மொரட்டுவை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் மொரட்டுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம், 5,000 ரூபா நாணயத்தாள்கள் 25 , 1,000 ரூபா நாணயத்தாள்கள் 08, 100 ரூபா நாணயத்தாள் ஒன்று மற்றும் 20 ரூபா நாணயத்தாள்கள் இரண்டு என்பன சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan