பயங்கரவாதிகளுக்கு துணை போகும் சீமான்; பாரத் ஹிந்து முன்னணி கண்டனம்

15 ஆடி 2025 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 167
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் போன்றோர், மதத்தின் அடிப்படையில் மனிதநேயம் இல்லாமல் கொலை செய்பவர்கள்.
அவர்கள் அப்பாவி முஸ்லிம் கைதிகள் அல்ல. ஹிந்து தர்மத்திற்காக, ஹிந்து மதத்தை காப்பதற்காக சேவை செய்வோரை, கொலை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ள அதிபயங்கரவாதிகள்.இவர்களை, அவர்களின் குடும்பத்தை சேர்ந்தோர், சிறைக்குச் சென்று பார்ப்பதை தவறு என்று சொல்ல முடியாது.
ஆனால், எல்லோருடைய ஓட்டுகளையும் பெறும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பயங்கரவாதிகளின் குடும்பத்தைs சேர்ந்தவர்களுடன் நேற்று சென்று, சென்னை புழல் சிறையில் மூன்று பயங்கரவாதிகளையும் பார்த்து பேசியுள்ளார். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மதுரையில் ஆக., 1ல் நாம் தமிழர் கட்சியும், இந்திய தேசிய லீக் கட்சியும் இணைந்து, முஸ்லிம் சிறைவாசிகளை சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
சீமான் தமிழக மக்களுக்காக தினமும் போராட்டங்கள் நடத்தி வருகிறார். அதற்காக, முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பது ஏற்புடையதல்ல.
ஜனநாயகம் என்ற பெயரில், மதத்தின் அடிப்படையில் கொலை செய்வோருக்காக போராட்டம் நடத்துவது, குரல் கொடுப்பது, ஜனநாயகத்தின் வலிமையை கேள்விக்குறியாக்கும். சீமான் இதை புரிந்து கொண்டு, இந்திய தேசிய லீக் கட்சி முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது.
மதுரையில் சிறைவாசிகளுக்கு ஆதரவாக நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காவல் துறை அனுமதி வழங்கக்கூடாது.
சீமான், தர்மத்தோடு சிந்தித்து அரசியல் செய்யவில்லை என்றால், அவருடைய முகத்திரையை கிழித்தெறிய பாரத் ஹிந்து முன்னணி பாடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.