Paristamil Navigation Paristamil advert login

ஜூலை 14 பேரணியில் இராணுவ வீரர் ஒருவர் தனது வாளால் காதை வெட்டிக்கொண்டார்!!!

ஜூலை 14 பேரணியில் இராணுவ வீரர் ஒருவர் தனது வாளால் காதை வெட்டிக்கொண்டார்!!!

14 ஆடி 2025 திங்கள் 22:07 | பார்வைகள் : 1074


ஜூலை 14 ஆம் திகதி பரிஸில் நடைபெற்ற தேசிய தின இராணுவப் பேரணியின் போது, EMIA-வில் பயிலும் ஒரு இளம் வீரர், தனது அலங்கார வாளால் தவறுதலாக தனது காதில் காயம் ஏற்படுத்திக்கொண்டார். 

இந்த சம்பவம் நேரடி ஒளிபரப்பின் போது பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டது. காதில்  இரத்தம் ஓடியபோதும், அவர் உறுதியோடு பேரணியில் தொடர்ந்து நடந்தார். மேலும் அவர் நலமாக உள்ளார் என்றும் அவரது நிலமை கவலைக்கிடமானதல்ல எனவும் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இவ்வாறான பேரணிகளில், வாள்களுடன் அழகான அங்கசுழல்கள் செய்வது வழக்கம். அதன்போது தான் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம். மேலும், அதே நிகழ்வில், ஒரு குதிரை இடறி விழுந்து அதனுடன் இருந்த வீரரும் கீழே விழுந்தார். இன்னொரு குதிரை கட்டுக்கடங்காமல் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது சம்பவத்திலும் யாருக்கும் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்