நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முகமது புஹாரி காலமானார்

14 ஆடி 2025 திங்கள் 18:04 | பார்வைகள் : 200
நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முகமது புஹாரி தனது 82ஆவது வயதில் காலமானார்.
முகமது புஹாரி நேற்று (13) லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் இரண்டு தடவைகள் இராணுவத் தலைவராகவும், ஜனநாயக ஜனாதிபதியாகவும் நைஜீரியா நாட்டை வழிநடத்தியவர் ஆவார்.
1983 ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா நாட்டில், ஒரு இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் முதன்முதலில் ஆட்சியை கைப்பற்றினார்.
20 மாதங்களுக்குள் சக இராணுவ வீரர் அவரை பதிவிலிருந்து நீக்கும் வரை ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.
2015 ஆம் ஆண்டு நான்காவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்ற முதலாவது எதிர்க்கட்சி வேட்பாளராக காணப்பட்டார்.
நைஜீரியாவை நீண்டகால ஊழல் மற்றும் கடும் பாதுகாப்பு நெருக்கடியிலிருந்து மீட்பதாக உறுதியளித்து புஹாரி ஆட்சிக்கு வந்தார்.
வடகிழக்கில் போகோ ஹராமின் தீவிரவாத வன்முறை மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தால் 2023ஆம் ஆண்டு அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
தற்போதைய ஜனாதிபதி போலா டினுபு ஒரு அறிக்கையில் புகாரியை "முழு மனதுடன் ஒரு தேசபக்தர், ஒரு சிப்பாய், ஒரு அரசியல்வாதி... " என வர்ணித்துள்ளார்.