பரிஸ் : Louis Vuitton காட்சியறை கொள்ளை!!
14 ஆடி 2025 திங்கள் 16:58 | பார்வைகள் : 8429
பரிசில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் விற்பனையகமான Louis Vuitton காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 1 ஆம் வட்டாரத்தின் rue du Louvre வீதியில் உள்ள இந்த காட்சியறைக்கு கையுறை, முகக்கவசம் அணிந்து உள்ளே நுழைந்த இருவர், அங்கிருந்த பொருட்களை சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் கொள்ளையிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 1 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் 6 ஆம் வட்டாரத்தின் Boulevard Saint-Germain பகுதியில் உள்ள இதே நிறுவனத்தின் காட்சியறை கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan