வெளிநாடு ஒன்றில் 26 இலங்கையர்கள் கைது
14 ஆடி 2025 திங்கள் 16:29 | பார்வைகள் : 1425
மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் குறித்து அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
அவர்களை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
ஜூலை 11 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தேசிய மத்திய பணியகத்திற்கு (NCB) மலேசியாவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகள் இலங்கை பொலிஸின் உதவியை நாடுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan