தேசிய நாள் அணிவகுப்பின் போது விழுந்த குதிரை வீரர்!!

14 ஆடி 2025 திங்கள் 14:12 | பார்வைகள் : 1186
இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெற்ற தேசிய நாள் இராணுவ அணிவகுப்பின் போது, குதிரை வீரர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
வரிசைக்கிரகமாக அணிவகுத்துச் சென்ற குதிரையில் ஒன்று திடீரென கால்கள் மடங்கி விழுந்தது. அதில் பயணித்த வீரர் கீழே விழுந்தார். இருந்தபோதும் அவர் சுதாகரித்து எழுந்து மீண்டும் குதிரையில் ஏறி பயணித்துள்ளார்.
அதேவேளை, அணிவகுப்பில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில் பொருத்தியிருந்த கத்தியினால் காதை வெட்டிக்கொண்ட சம்பவமும் பதிவானது. காதில் இரத்தம் வழிய வழிய அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.