Paristamil Navigation Paristamil advert login

காசாவில் குடிநீர் விநியோகம் பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

காசாவில் குடிநீர் விநியோகம் பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

14 ஆடி 2025 திங்கள் 08:13 | பார்வைகள் : 220


மத்திய காசாவில் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுடைய உடல்களை நுசெரெய்த் அல் அவ்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அவசரசேவை பிரிவினர் ஏழு சிறுவர்கள்; உட்பட 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுசெய்ரெத் அகதிமுகாமில் தண்ணீர்விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தொழில்நுட்ப கோளாறினால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாதி இலக்குவைக்கபட்டார் ஆனால் இலக்கு தவறியது என தெரிவித்துள்ளது.

இரத்தக்காயங்களுடன் சிறுவர்கள் காணப்படும் படங்களும் உயிரிழந்த நிலையில் சிறுவர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகியுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்