டொரொண்டோவில் கடும் புயல் எச்சரிக்கை

14 ஆடி 2025 திங்கள் 06:13 | பார்வைகள் : 182
டொரொண்டோ நகரத்திற்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மதியம் வெளியிட்ட எச்சரிக்கையில், மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மரங்களையும் வாகனங்களையும் பாதிக்கக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
மெதுவாக நகரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மேகங்கள், இவ்வேளையில் கனமழையை கொண்டுவந்திருக்கின்றன.
ஆலங்கட்டி தர மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பெய்யும் எனவும், பெரியளவிலான ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும், மரங்களை முறித்தெறியக்கூடிய அல்லது வாகனங்களை கவிழ்க்கக்கூடிய அளவிற்கு பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படும் எனவும் இவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
"இடி முழங்கும் போது உடனே வீடுகளுக்குள் செல்லுமாறும், இடி ஒலிக்கும்போது வெளியில் இருக்க வேண்டாம்," எனவும் கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
புயல் காரணமாக திடீரென வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும், வீதிகளில் பார்வைத்திறன் குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.