’பாதுகாப்பு’ துறைக்கு இரண்டுமடங்கு நிதி!!

13 ஆடி 2025 ஞாயிறு 21:10 | பார்வைகள் : 593
பாதுகாப்பு துறைக்கு இரண்டுமடங்கு நிதி ஒதுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடில் 3.5 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டில் மேலும் 3 பில்லியன் யூரோக்கள் ஒதுக்க உள்ளதாகவும், பிரெஞ்சு பாதுகாப்பின் மொத்த மதிப்பு 64 பில்லியன் யூரோக்களாக 2027 ஆம் ஆண்டில் உயர்வடையும் எனவும் இன்று ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை மக்ரோன் அறிவித்துள்ளார்.
நாளை, ஜூலை 14 தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக நாடு தயாராகிவரும் நிலையில் இந்த அறிவிப்பை சற்று முன்னர் அவர் வெளியிட்டார்.
2017 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஆயுதப்படையின் மதிப்பு 32 பில்லியனான இருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.