Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பேருந்துக்குள் மோதல்! - ஒருவர் மருத்துவமனையில்..!!

பரிஸ் : பேருந்துக்குள் மோதல்! - ஒருவர் மருத்துவமனையில்..!!

13 ஆடி 2025 ஞாயிறு 20:10 | பார்வைகள் : 839


 

பேருந்தில் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.

14 ஆம் வட்டாரத்தின் Porte d'Orléans பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் பேருந்தில் பயணித்த பயணியிடம், நபர் ஒருவர் சிகரெட் பற்றவைப்பதற்காக லைட்டர் ஒன்றைக் கோரியுள்ளார். லைட்டர் இல்லை என குறித்த பயணி தெரிவிக்க, விடாமல் அவரை தொந்தரவு செய்து லைட்டர் இருக்கிறதா என நச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் கத்திக்குத்தில் முடிந்துள்ளது. குறித்த நபர் அப்பயணியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இரண்டு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

N66 இலக்க பேருந்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்