Paristamil Navigation Paristamil advert login

தைவான் HIMARS ஏவுகணை - சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்..

தைவான் HIMARS ஏவுகணை - சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்..

13 ஆடி 2025 ஞாயிறு 18:24 | பார்வைகள் : 2361


சீனாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தைவான் HIMARS ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்தியுள்ளது.

தைவான், சீனாவின் படையெடுப்புக்கு எதிராக தனது ராணுவ வலிமையை நிரூபிக்க, மிகச் சக்திவாய்ந்த HIMARS (High Mobility Artillery Rocket System) ஏவுகணை அமைப்பை செயல்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை Taichung பகுதியில் நடைபெறும் Han Kuang எனப்படும் தைவானின் வருடாந்த இராணுவ பயிற்சியின் நான்காவது நாளில் இடம்பெற்றது.

HIMARS என்பது ஒரு அதிவேக கலைநுட்ப ரொக்கெட் ஏவுதளமாகும். இது சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் தாக்கக்கூடியது.

இதனை கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து தைவான் வாங்கியது, முதற்கட்டமாக 11 யூனிட்கள் ஏற்கனவே பெற்றுள்ளன.

இந்த HIMARS அமைப்புகள் உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு எதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதில் இருந்து உலகளாவிய கவனம் பெற்றுள்ளன.

தற்போது தைவானில் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவது, சீனாவிற்கு வெளிப்படையான எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

இது சீனாவின் ஃபுஜியான் மாகாணக் கரையோரங்களை நேரடியாக தாக்கக்கூடிய தொலைவைக் கொண்டுள்ளது.

இந்த HIMARS அமைப்பு, C-17 Globemaster, C-5 Galaxy and Lockheed C-130 Hercules போன்ற விமானங்கள் மூலம் எளிதாக ஏவக்கூடியது கூடியது என்பதும் முக்கிய அம்சமாகும்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இதை “முட்டாள்தனத்தைத் தவிர வேறொன்றுமில்லை” என புறக்கணித்துள்ளது.

ஆனால், தைவானின் ஜனாதிபதி Lai Ching-te தெரிவித்திருப்பது போல், “தைவானின் எதிர்காலத்தை அதன் மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்” என்பது தைவானின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்