பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்..
13 ஆடி 2025 ஞாயிறு 12:32 | பார்வைகள் : 6074
பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சுமார் 700க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள கோட்டா சீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த கோட்டா சீனிவாச ராவுக்கு வயது 83 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவை சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், பல படங்களில் வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'சாமி' திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் அவர் பிரபலமானார். அதன் பின், விஜய் நடித்த 'திருப்பாச்சி', கார்த்தி நடித்த 'சகுனி', ஜீவா நடித்த 'கோ' போன்ற பல தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டும் இன்றி, டப்பிங் கலைஞராகவும் முத்திரை பதித்த இவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டசபையில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு இவருடைய கலை சேவைக்கு பாராட்டு தெரிவித்து, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan