புத்த ஆலயத்தில் தீ.. முற்றாக சேதம்!!
.jpg)
12 ஆடி 2025 சனி 18:19 | பார்வைகள் : 5702
Breux-Jouy, (Essonne) நகரில் உள்ள புத்த ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குறித்த ஆலயம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை - சனிக்கிழமைக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 10.30 மணி அளவில் தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆலயத்துக்குள் சிக்கியிருந்த 15 வரையான பிக்குமார்களை வெளியேற்றி, தீயை அணைக்க போராடினர்.
பலமணிநேர போராட்டத்தின் பின்னர் அதிகாலை 3 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 500 சதுர மீற்றர் அளவு கொண்ட ஆலயம் முற்றாக எரிந்துள்ளது. அதன் கூரை இடிந்து விழுந்துள்ளது.
மின் கசிவின் காரணமாக தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த புத்த ஆலயம் பிரான்சில் உள்ள மிகப்பெரிய ஆலயம் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த புத்த தேவாயலம் கடந்த 2023 ஆம் ஆண்டு 3.4 மில்லியன் யூரோக்கள் செலவில் புதுப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3