கிளிநொச்சியில் தொடருந்துடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

12 ஆடி 2025 சனி 16:51 | பார்வைகள் : 155
கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் தொடருந்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு அஞ்சல் தொடருந்தே குடும்பஸ்தர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில், தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய கறுப்பையா ஐங்கரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மதுபோதையில் வீழ்ந்த நிலையில் தொடருந்துடன் மோதியே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கிளிநொச்சி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.