Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14 கொண்டாட்டங்களுக்கு தடை!!

பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14  கொண்டாட்டங்களுக்கு தடை!!

12 ஆடி 2025 சனி 07:00 | பார்வைகள் : 3085


 

பிரான்சின் பல்வேறு மாவட்டங்களில் ஜூலை 14, கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..

காட்டுத்தீ பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு, ஜூலை 14 தேசிய நாளின் போது வானவேடிக்கைகள், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Deux-Sèvres, Sarthe, Dordogne , Creuse, Vienne, Vendée மற்றும் Loire-Atlantique போன்ற மாவட்டங்களுக்கு இந்த தடை விதிக்கப்படுகிறது.

தலைநகர் பரிசில் அவ்வாறான ஆபத்துக்கள் எதுவும் இல்லை என்றபோதும், சுற்றுச்சூழல் மாசடைவைக் கருத்தில் கொண்டு ட்ரோன்கள் மூலம் வானவேடிக்கை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,000 ட்ரோன்களைக் கொண்டு ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்