ஐரோப்பாவில் பிரான்ஸ்தான் ரஷியாவின் முக்கிய எதிரி என புடின் அறிவிப்பு!!!

11 ஆடி 2025 வெள்ளி 22:56 | பார்வைகள் : 1325
ரஷியா, பிரான்சை ஐரோப்பாவில் தனது முக்கிய எதிரியாக அறிவித்துள்ளதாக பிரான்ஸ் படைத்துறை தலைவர் திரி புர்கார்ட் (Thierry Burkhard) தெரிவித்துள்ளார்.
இது, உக்ரைனுக்கு பரிஸ் வழங்கும் ஆதரவுக்கு பதிலளிக்கும் வகையில் விளாடிமிர் புடின் எடுத்த முடிவாகும். நேரடி தாக்குதல்கள் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், ரஷியா தகவல் அட்டூழியம், இணைய தாக்குதல்கள், உளவுத்துறை நடவடிக்கைகள் போன்ற கலப்பு தாக்குதல்களின் வாயிலாக பரிஸை குறிவைக்கும் வாய்ப்பு உள்ளது.
பரப்பளவில், கடலடித்தள நீர் மூழ்கிக் கப்பல்கள், விண்வெளி செயற்கைக்கோள்கள் வழியே உளவுத்துறை நடவடிக்கைகள், மற்றும் ரஷிய விமானங்களுடனான வான்வெளி மோதல்கள் ஆகியவையும் இடம்பெறுகின்றன.
ரஷியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல்கள் அட்லாண்டிக் மற்றும் மெடிதேரியன் கடல்களில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளை கண்காணித்து வருகின்றன. இது, பிரான்சின் பாதுகாப்புக்கு ஒரு புதிய வகை ஆபத்தாக பார்க்கப்படுகிறது.