Renault மீது புதிய மாசுபாடு மோசடி வழக்கு!!!

11 ஆடி 2025 வெள்ளி 15:18 | பார்வைகள் : 463
டீசல்கேட் (Dieselgate) ஊழலில் ரெனோல்ருக்கு (Renault)எதிராக மூன்றாவது வழக்கு தொடர பரிஸ் குற்றவியல் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
2009 முதல் 2017 வரையிலான Euro 5 மற்றும் Euro 6 தர வாகனங்களில், சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ரெனோல்ற் ஒழுங்கமைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இயல்பான பயண சூழ்நிலையில் அவை இந்த தரங்களுக்கு இணங்கவில்லையெனக் கூறப்படுகிறது. இதனால், காற்று மாசு அதிகரித்து மனிதர்களில் சுவாச நோய்களை ஏற்படுத்தியிருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ரெனோல்ற் குற்றத்தை மறுத்து, தாம் எப்போதும் விதிமுறைகளை பின்பற்றியதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு தரப்பு கூறுகையில், ரெனோல்ற் என்ஜின் வடிவமைப்பாளர்கள் மாசுபாட்டை குறைப்பதற்கான அமைப்புகளை சோதனை தரங்களை கடக்கும்படியே உருவாக்கினயுள்ளனர் என்றும், இது திட்டமிட்ட கூட்டுக் செயல் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வழக்கில் 381 பேர்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர், மேலும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒரு டீசல் என்ஜின் வகையில் மட்டும் 9 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.