இலங்கையில் மனைவியை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி
11 ஆடி 2025 வெள்ளி 15:49 | பார்வைகள் : 1144
தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரான கணவன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொழும்பு - கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மனைவியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan