ஈரானில் காணாமல் போன பிரஞ்சு சுற்றுலா பயணி கைது: தெஹ்ரான் அறிவிப்பு!!!

10 ஆடி 2025 வியாழன் 22:19 | பார்வைகள் : 1910
ஈரானில் காணாமல் போன பிரஞ்சு-ஜெர்மன் குடிமகனான லெனார்ட் மோன்டர்லாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் ஜூன் 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் "அவர் குற்றம் ஒன்றைச் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளதாக" கூறியுள்ளார்.
பிரான்ஸ் தூதரகத்தில் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் "எங்கள் நாட்டவரின் நிலைமை குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருப்பதாகவும்" பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இளைஞரின் பெற்றோர் பிரான்ஸ் வெளியுறவுத்துறையின் நெருக்கடி மற்றும் ஆதரவு மையத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். பிரான்ஸ் அரசு தனது குடிமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மேலதிக கருத்துகளை தெரிவிக்க மறுத்துள்ளது.
வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் அனைத்து பிரஞ்சு குடிமக்களும் வெளியுறவுத்துறையின் ஆலோசனைகளை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என அமைச்சர் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.